தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த பிறந்து நான்கு மாதமேயான யானைக்குட்டியை வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி காயங்கள் இன்றி மீட்டனர்.
போடூர் அடுத்த கட்டமடுவு கிராமத்தில் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் அந்த குட்டியானை தவறி விழுந்தது.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் குறுகிய நேரத்திற்குள் யானைக் குட்டியை மீட்டனர்.
மிகவும் சோர்வாக காணப்பட்ட யானைக்குட்டி, ஒகேனக்கல் அடுத்த சின்னாறு வனப்பகுதியில் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.