பாகிஸ்தானில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையற்ற சூழலால், பாகிஸ்தான் தின இராணுவ அணிவகுப்பை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
கடந்த 1940-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லாகூர் தீர்மானத்தின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23-ல், இராணுவ அணிவகுப்பு நடைபெறும்.
பாகிஸ்தானில் தற்போது பணவீக்கம் அதிகரிப்பாலும், பாதுகாப்புத் துறைக்கான செலவை குறைக்க சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்து வருவதாலும், ராணுவ அணி வகுப்பை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.