​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"8 அடியில் கிடைத்த நிலத்தடி நீர், 1000 அடிக்குக் கீழ் சென்றுவிட்டது.." - அன்புமணி ராமதாஸ்..!

Published : Mar 11, 2023 3:31 PM

"8 அடியில் கிடைத்த நிலத்தடி நீர், 1000 அடிக்குக் கீழ் சென்றுவிட்டது.." - அன்புமணி ராமதாஸ்..!

Mar 11, 2023 3:31 PM

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சியால் பாதிப்புகள் அதிகம் என்றும் கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் என்.எல்.சி வந்த பிறகு ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில் , சென்னையில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

22 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படும் தமிழகத்திற்கு என்எல்சியின் பங்களிப்பு வெறும் 800 மெகாவாட் மட்டுமே என அப்போது அவர் கூறினார்.

சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண், சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் குவித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மண் வெட்டி எடுக்கப்பட்டதால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்ளே வந்துள்ளதாக்க தெரிவித்துள்ளார்.