​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு..!

Published : Mar 11, 2023 11:37 AM

தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு..!

Mar 11, 2023 11:37 AM

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் காய்ச்சல் பாதிப்பால் 13 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட 33 பேரில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், நேற்று மட்டும் சுமார் 60 பேர் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும்படியும், முகக்கவசம் அணியவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.