95 வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் நாளை நள்ளிரவு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்ஏஞ்சலஸ் நகரில் வழங்கப்படுகின்றன.
நடிகை தீபிகா படுகோன் விருதுகளை தொகுத்து வழங்குபவராக மேடையில் தோன்றுகிறார். இந்நிலையில் ஆஸ்கர் விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பு பரிசளிப்பு நிகழ்ச்சி, விருந்து நிகழ்ச்சி என்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக விதவிதமான ஆடைகளை தமக்காக தீபிகா படுகோன் வடிவமைத்து இருக்கிறார்.