பேரிடர் காலங்களில் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பேரழிவு ஆபத்துகளை குறைப்பது தொடர்பான தேசிய இரண்டு நாள் மாநாட்டை டெல்லியில் தொடங்கி வைத்து பேசிய அவர், அண்மையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களைக் கண்டபிறகு, இந்தியாவின் பேரிடர் கால நிர்வாக மேலாண்மையை உலகம் புரிந்துக் கொண்டு பாராட்டிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.
புதிய கட்டடங்களைக் கட்டும்போது பேரிடர் காலத்தை கவனத்தில் கொண்டு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.