மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார்.
போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லத்லி பஹ்னா யோஜனா எனப்படும் இத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இதன்மூலம் 23 வயது முதல் 60 வயது வரையிலான, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் மற்றும் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு குறைவாக உள்ள பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.