​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லாட்டரி கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்த போராளி..! மக்களுக்காக செய்ததாக சொல்கிறார்

Published : Mar 04, 2023 9:23 PM



லாட்டரி கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்த போராளி..! மக்களுக்காக செய்ததாக சொல்கிறார்

Mar 04, 2023 9:23 PM

மக்கள் நலன் கருதி தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் விற்கப்படும் லாட்டரிச்சீட்டினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி இளைஞர் ஒருவர் லாட்டரிச்சீட்டு கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கேரள மாநிலம் திருப்புணித்துரா பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற நபர் லாட்டரி சீட்டுக்கள் விற்கும் கடைகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், லாட்டரி வியாபாரிகள் செல்வத்தில் கொழிப்பதாகவும் இது தடுக்கப்பட வேண்டும் என்று முக நூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் . அந்த வீடியோவின் இறுதியில் மீனாட்ஸி ஏஜெண்ஸி என்ற லாட்டரிக் கடைக்கு தீவைக்கபோவதாகவும் தெரிவித்தார்.

சொன்னபடியே அங்குள்ள மீனாட்சி ஏஜெண்ஸீஸ் என்ற லாட்டரிகடைக்கு சென்ற ராஜேஷ், கையோடு பாட்டிலில் எடுத்துச்சென்றிருந்த பெட்ரோலை ஊற்றி தீயை பற்றவைத்தார்.

குப்பென்று பரவிய தீயை அணைப்பதற்குள்ளாக அந்த கடையில் இருந்த லாட்ட்சரிச்சீட்டுக்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது

ஆனால் ராஜேஷ் அதனை எதிர்கொண்டு அங்கிருந்து செல்ல மறுத்து லாட்டரிக்கு எதிராக குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.