6 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட திருச்சி, காவிரி பாலத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.
திருச்சி, காவிரி பாலம் 1976ம் ஆண்டு 16 தூண்களோடு 541.46 மீட்டர் நீளம் மற்றும் 19.20 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டது.
46 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த இந்த பாலம் 6 மாதங்களுக்கு முன்பு வலு இழந்ததால் புனரமைப்பு பணிகள் தொடங்கியது.
இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து அமைச்சர் கே.என்.நேரு பாலத்தை இன்று திறந்து வைத்து வாகன போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், அவர் அளித்த பேட்டியில், “இதே பகுதியில் புதிய பாலம் அமைக்க 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும், “திருச்சியில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான ஆய்வு தொடங்க உள்ளது.” என்றும் கூறினார்.