கொலம்பியாவில், சாலை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள், 80-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளையும், எண்ணெய் ஊழியர்களையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
பழங்குடி மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் உள்ள பள்ளிகளையும், சாலைகளையும் மேம்படுத்தி தருமாறு, அங்குள்ள எண்ணெய் ஆலைகளிடமும், சுரங்க நிறுவனங்களிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கக்கெட்டாவில் சீன நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணறு அருகே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது மோதல் வெடித்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மத்தியில் ஊடுருவிய போராளிக் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் போலீசார் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.