தமிழகத்தில் நீட் தேர்வு ஒருபோதும் ரத்து செய்யப்படாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த வேலம்பட்டியில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும், யார் யாரை சென்று பார்த்தாலும் கூட நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்யாது என்றும் கூறினார்.