டாட்டாவுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், சென்னை, டெல்லி, மும்பை உட்பட 11 நகரங்களில் விமான பணிப்பெண்களுக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாதுகாப்பு மற்றும் சேவை பிரிவில் பணியாற்ற தகுதியுள்ள, 18 முதல் 27 வயதுக்குள் உள்ள, பிளஸ் 2 தேர்ச்சியடைந்த பெண்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இன்று மும்பையில் தொடங்கிய நேர்முகத்தேர்வு, வரும் 24-ம் தேதி புனேவில் நிறைவடைகிறது. வரும் 10-ம் தேதி, ஏர் இந்தியா நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறவுள்ளது.