அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், தொடர்ந்த உரிமையியல் வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பல்வேறு வாதங்களை முன்வைத்த மனோஜ் பாண்டியன், அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இடைக்கால உத்தரவு ஏதும் பிறக்க மறுத்த நீதிபதி வழக்கு குறித்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 17ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்