வீரர்கள் பறக்க உதவும் நவீன ஜெட்பேக் ஆடையை (Jetpack Suit) இந்திய ராணுவம் பரிசோதித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த Gravity நிறுவனம் அந்த ஆடையை உருவாக்கியுள்ளது. அதனை உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள வான்வழி பயிற்சி பள்ளியில் இந்திய ராணுவம் பரிசோதித்தது. அப்போது Gravity நிறுவனத்தின் நிறுவனரான Richard Browning, ஜெட்பேக் ஆடையை உடலில் கட்டிக் கொண்டு நீர் நிலைகள் உள்ளிட்டவை மீது பறந்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் பதற்றம் நிலவும் நிலையில், அவசர நிலை கொள்முதல் அடிப்படையில் 48 ஜேட் பேக்குகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஜெட் பேக்குகளை ராணுவம் பரிசோதித்துள்ளது.