கொலம்பியாவில், சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் குதித்த பழங்குடி மக்கள், போலீசார் 79 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
பழங்குடி மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் உள்ள பள்ளிகளையும், சாலைகளையும் மேம்படுத்தி தருமாறு, அங்குள்ள எண்ணெய் ஆலைகளிடமும், சுரங்க நிறுவனங்களிடமும் கோரிக்கை வைத்து போராடிவருகின்றனர்.
கக்கெட்டாவில், சீன நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணறுக்கு செல்லும் வழியில் அவர்கள் மறியலில் ஈடுபட்டபோது வன்முறை வெடித்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மத்தியில் ஊடுருவி, போராளி குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
79 போலீசாரையும், எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 9 பேரையும் பணயக் கைதிகளாக அப்பகுதி மக்கள் பிடித்து வைத்துள்ளனர்.