​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓசியில் பெட்ரோல் கேட்டு பங்க் ஊழியரை தாக்கி 'புள்ளிங்கோ' அட்டகாசம்..!

Published : Mar 03, 2023 1:11 PM

ஓசியில் பெட்ரோல் கேட்டு பங்க் ஊழியரை தாக்கி 'புள்ளிங்கோ' அட்டகாசம்..!

Mar 03, 2023 1:11 PM

இரவில் மூடிய பெட்ரோல் பங்க்கில் ஓசியில் பெட்ரோல் கேட்டு பங்க் ஊழியரை தாக்கிய 'புள்ளிங்கோ' வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.

திருவள்ளூர் அருகே பேரம்பாக்கத்தில் பெட்ரோல் பங்கை மூடிய பின்பு, இரவு 11 மணியளவில் ஊழியர் சுந்தர்ராஜன் என்பவரிடம் மூன்று இளைஞர்கள் ஓசியில் பெட்ரோல் கேட்டு அவரை தாக்கி உள்ளனர்.

மேலும் தங்களது கூட்டாளிகளை வரவழைத்த அவர்கள் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.