​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57 ஆக உயர்வு..!

Published : Mar 03, 2023 6:51 AM

கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57 ஆக உயர்வு..!

Mar 03, 2023 6:51 AM

கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 57 பேர் உயிரிழப்பிற்கு, ரயில்வே நிர்வாகம் காரணம் எனக்கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் ஏதென்ஸிலிருந்து, 350 பயணிகளுடன் தெசலோனிக்கி நகரம் நோக்கி சென்ற ரயில், செவ்வாய்கிழமை நள்ளிரவு சரக்கு ரயில் மீது மோதியது.

இதில், பயணிகள் ரயிலின் முதல் 4 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தவாறே தடம் புரண்டன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களின் அலட்சியம் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறி ரயில்வேயின் மோசமான நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்களை கண்ணீர்புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடித்தனர்.