போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் கீழ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மோசடி செய்தல் உட்பட 7 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பெயரில் கடிதம் வழங்கி, டாக்டர் பட்டம் வழங்குவதை மறைத்து, அரங்கம் கேட்டு மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பின் நிர்வாகிகள் மீது அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர்.