திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், நகை வாங்குவது போல நடித்து 26 கிராம் தங்கச் செயினை திருடிச் சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
புதன்கிழமை காலை 11 மணியளவில் நகை வாங்க வந்த பெண் ஒருவர், டிசைன்களை பார்த்துவிட்டு நகை வாங்காமல் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, நகைகளை சரிபார்த்த ஊழியர்கள், ஒரு தங்க செயின் காணாமல் போனதை அறிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது, அந்த பெண் ஊழியர்கள் திரும்பிய நேரம் பார்த்து, செயினை திருடி புடவைக்குள் மறைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.