மலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், சுமார் 26 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை இடைவிடாது பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட ஜோகூர் உட்பட 6 மாகாணங்களில் தேசிய மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 25 ஆறுகள் நிரம்பி ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கடந்த நவம்பர் மாதம் பருவமழை தொடங்கிய நிலையில், தொடர்ந்து 6 வது முறையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.