திருவண்ணாமலையில் கடந்த மாதம் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை தொடர்பான வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளை திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் நிஜாமுதின் என்பவரை கர்நாடக மாநிலம் கோலாரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
பிப்ரவரி 12ஆம் தேதி அடுத்தடுத்து நான்கு மையங்களில் ஏடிஎம் இயந்திரங்களை கேஸ் சிலிண்டர் வைத்து உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிந்து ஒன்பது தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை பல்வேறு மாநிலங்களில் போலீசார் தேடி வந்தனர்.
ஹரியானாவில் முகமது ஆரிஃப், ஆசாத் மற்றும் கர்நாடக மாநிலம் கோலாரில் குத்ரத்பாஷா, அப்சர் உசேன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.