அதானி-ஹின்டன்பர்க் விவகாரம் குறித்து 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய செபி அமைப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தொடுக்கப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீது, தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது.
அப்போது செபி சட்ட விதி மீறப்பட்டுள்ளதா, பங்குசந்தை மதிப்பில் ஏதேனும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் பங்கு சந்தை முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கும் நடைமுறைகளை வகுப்பது உள்ளிட்டவற்றுக்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஎம் சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்