தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎஸ்பி-ஐ கண்டித்து நடைபெற்ற கண்டன போராட்டத்தில், இந்து முன்னணி நிர்வாகி குற்றாலநாதன் கடுமையாக விமர்சித்து பேசினார்.
சங்கரன்கோவிலில் கடந்த 25ஆம் தேதியன்று திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது அதன் நிர்வாகியை புளியங்குடி டிஎஸ்பி அசோக்குமார் மிரட்டியதாக கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சங்கரன்கோவிலில் டிஎஸ்பி-ஐ கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் கடுமையாக விமர்சித்து பேசினார்.