இந்தியாவை விட தினமும் சராசரியாக 4 லட்சத்து 50,000 பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய்யை கூடுதலாக சீனா இறக்குமதி செய்துவந்தாலும், இந்திய சந்தையை விரிவாக்கம் செய்யவே ரஷ்யா விரும்புவதாக வணிகத்துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடையை சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும், சீனாவும் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவருகின்றன.
சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சொந்த கப்பல்கள் மூலம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை கொண்டு வரும் நிலையில், இந்தியாவிற்கோ, ரஷ்ய நாட்டு சரக்கு கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டுவரப்படுகிறது.
இதனால் அதிக லாபம் ஈட்டப்படுவதுடன், இந்தியாவிற்கான பயண நேரமும் குறைவு என்பதால் இந்திய சந்தையை வலுப்படுத்த ரஷ்யா முயற்சித்துவருகிறது.