மத்திய பிரதேசத்தில் ரயிலில் குண்டுவெடித்தது தொடர்பான வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017ஆம் ஆண்டில் போபால் - உஜ்ஜயின் ரயிலில் குண்டுவெடித்ததில் 10 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட விசாரணையின்படி, லக்னோ பகுதியில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், ஆயுதங்கள், ஐ.எஸ். இயக்க கொடி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து, முகமது ஃபைசல் என்பவனை கைது செய்த என்.ஐ.ஏ., ரயில் குண்டுவெடிப்பிற்கும் அவனுக்கும் இருந்த தொடர்பை உறுதி செய்து, மேலும் 7 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், ஃபைசல் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்த என்.ஐ.ஏ. நீதிமன்றம், மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.