சேலத்தில் உள்ள பேக்கரியில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நெத்திமேடு பகுதியில் இயங்கி வரும் சென்னை கேக்ஸ் பேக்கரியில் சுரேஷ் என்பவர் வாங்கிச் சென்ற பால்கோவா முழுவதும் பூஞ்சை பிடித்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட நியமன அலுவலருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, பேக்கரிக்கு சென்று ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தபோதே, மற்றொரு வாடிக்கையாளர் தீபக் சரவணன் தான் வாங்கிச் சென்ற வெஜ்ரோலில் சுமார் 2 இன்ச் அளவுள்ள துருப்பிடித்த ஆணி உள்ளதாக புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து, விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவுப்பொருட்களின் மாதிரியை எடுத்துச் சென்றுள்ளனர்.