ராய்சினா டைலாக் எனப்படும் மூன்று நாள் சர்வதேச கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், ராணுவத் தளபதிகள், சர்வதேச செய்தியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொள்கிறார்.
ஜனநாயகம், பாதுகாப்பு, இறையாண்மை, பூகோளவியல், பாஸ்போர்ட் பிரச்சினைகள் உள்பட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற உள்ளன. சமூக வலைதளங்கள் மூலமாக லட்சக்கணக்கானோர் நிகழ்ச்சியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.