ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் ''ஜூலியட்'' புயலின் தாக்கத்தினால் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
மாட்ரிட் அருகே உள்ள குவாடலஜாரா நகரம், மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைந்துபோய் உள்ளது. முக்கிய சாலைகள், இருப்பு பாதைகள், வானுயர்ந்த கட்டடங்கள் என எங்கு பாத்தாலும் பனி படர்ந்து காணப்படுகிறது.
பனிப்புயலை தொடர்ந்து பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து தடை பட்டுள்ளது. தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.