வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்துள்ளன.
சென்னையில் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆயிரத்து 118 ரூபாய் 50 காசுக்கும், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 351 ரூபாய் உயர்த்தப்பட்டு 2 ஆயிரத்து 268 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலையை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி எரிவாயு சிலிண்டர்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நிலையில் சுமார் 8 மாதத்திற்கு பிறகு வீட்டு உபயோக சிலிண்டரின் விலையும், ஜனவரி மாதத்திற்குப் பிறகு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது