ஜி 20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பு வகிக்கும் நிலையில், இன்றும் நாளையும் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் ஜி 20 உறுப்பு நாடுகள் உள்பட 35 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்று சர்வதேச ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் சீன் கங் (Qin Gang) நாளைய அமர்வில் பங்கேற்கிறார். உலகளாவிய பொருளாதாரத்திற்கு நிலவும் சவால்களின் மீது ஜி20 அமைப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தி உள்ளது.