​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொழிலதிபரிடம் 1.40கோடி கொள்ளை அடித்த வழக்கில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உட்பட 11 பேர் கைது..!

Published : Feb 28, 2023 8:46 PM

தொழிலதிபரிடம் 1.40கோடி கொள்ளை அடித்த வழக்கில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உட்பட 11 பேர் கைது..!

Feb 28, 2023 8:46 PM

சென்னை, சௌகார்பேட்டையில் போலீஸ் எனக் கூறி  நகைவியாபாரியிடம் ஒரு கோடியே நாற்பது லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உட்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு, 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வழக்கறிஞர் மாதவன், ராஜேஷ், அசோக், கொள்ளையில் ஈடுபட்ட பாட்ஷா மற்றும் அவரது மனைவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணை விடுவித்த போலீசார் கொள்ளையடித்த பணத்தில் பீஸ் வாங்கியதற்காக வழக்கறிஞர் மாதவனை கைது செய்ததாக தெரிவித்தனர்.