கியூபாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். ஹோல்குயின் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
ஏற்கனவே 150 ஹெக்டேர் வனப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகி விட்டதாகவும், வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக நெருப்பை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கியூப அரசு கூறியுள்ளது.
தொடரும் நெருப்பின் காரணமாக தேசிய பூங்காவை ஒட்டியுள்ள இடங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் வெளியேறி உள்ளனர்.
இந்தநிலையில் சுமார் 8 ஆயிரத்து 480 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மென்சுரா-பைலோட்டோ தேசிய பூங்காவை தீ நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.