அமெரிக்காவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மூதாட்டியை அலிகேட்டர் வகை முதலை ஒன்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
ஃப்ளோரிடாவில் குளக்கரை ஒன்றின் ஓரமாக 85 வயதான அந்த மூதாட்டி தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் மறைந்திருந்த முதலை, அவரது நாயைக் கவ்விப் பிடித்துள்ளது.
தனது நாயை மீட்க மூதாட்டி போராடியபோது, அவரையும் முதலை தாக்கிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் 11 அடி நீளம் கொண்ட அந்த முதலையை பிடித்துச் சென்றனர்.