உலகில் எங்கு பேரிடர் நிகழ்ந்தாலும் மனிதநேய நலனுக்கே இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து உதவும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா நாடுகளில் ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தாயகம் திரும்பிய குழுவினருடன் கலந்துரையாடிய வீடியோவை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
2 நாட்கள் மருத்துவ முகாம் நடத்தி 7 ஆயிரத்து 500 பேருக்கு சிகிச்சை அளித்ததாகவும், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ஏராளமானவர்களை பாராசூட் வீரர்கள் மீட்டதாகவும் தெரிவித்த மீட்புக்குழுவினர், தங்களது தனிப்பட்ட அனுபவங்களையும் பிரதமருடன் பகிர்ந்துக் கொண்டனர்.