கோவை கவுண்டம்பாளையம் அருகே, காலை வேளையில் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு காருக்குள்ளேயே படுத்துறங்கிய டிப் டாப் போதை ஆசாமியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் நெடு நேரமாக ஒரு கார் நின்றிருந்துள்ளது.
வழக்கமாக காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கக்கூடிய அந்த சாலையில் கார் சாலையிலேயே நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், காருக்கு அருகில் சென்ற வாகன ஓட்டிகள், உள்ளே உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்ப முயன்றுள்ளனர்.
அந்த நபர் எழுந்திருக்காத நிலையில், அங்கு சென்ற போலீசார் கார் கண்ணாடியை உடைத்து அந்த நபரை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் ரஞ்சித் என்ற அந்த நபர், மன உளைச்சலால் காலையிலேயே அதிகளவில் மதுஅருந்திவிட்டு வாகனத்தை ஓட்ட முடியாமல் படுத்துறங்கியது விசாரணையில் தெரியவந்தது.