இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மைய திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளனர்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், இந்த பயணத்தின் போது தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.