​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடல் நீர்மட்டம் கணித்ததை விட வேகமாக அதிகரித்து வருகிறது.... நாசா விண்கலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு

Published : Jan 27, 2023 6:21 AM

கடல் நீர்மட்டம் கணித்ததை விட வேகமாக அதிகரித்து வருகிறது.... நாசா விண்கலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு

Jan 27, 2023 6:21 AM

உலகில் கடல் நீர்மட்டம் ஏற்கனவே கணித்ததை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2018ல் செலுத்தப்பட்ட ICESat-2  என்ற நாசா செயற்கைக்கோள் அளவீடுகளைக் கொண்டு கடல் நீர்மட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், விஞ்ஞானிகள் நினைத்ததை விட கடலுக்கும் நிலப்பரப்புக்குமான உயரம் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடல் நீர்மட்டம் இரண்டு மீட்டர் அதிகரிக்கும் பட்சத்தில் பாங்காக்கின் பெரும்பகுதியையும், உலகம் முழுவதும் 24 கோடி மக்களையும் கடல் மட்டத்திற்கு கீழே வைக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.