74-வது குடியரசு தினத்தையொட்டி இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புடின், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியப் பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்தியாவின் பங்களிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில், இந்தியா-ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் இந்தியாவின் சாதனைகள் பரவலாக அறியப்படுவதாகவும், சர்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா கணிசமான பங்களிப்பை வழங்குவதாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.