மத்திய அரசின் நடவடிக்கைகளால் உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், பல்வேறு துறைகளில் நாடு முன்னணியில் உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரம் நம் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளதாகவும், ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், காலநிலை மாற்றம் உள்பட உலக நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் ஜி20 அமைப்பின் கூட்டம் அமையும் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.