​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி - எகிப்து அதிபர் பேச்சுவார்த்தை.. 5 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

Published : Jan 25, 2023 5:40 PM

பிரதமர் மோடி - எகிப்து அதிபர் பேச்சுவார்த்தை.. 5 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

Jan 25, 2023 5:40 PM

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் எல் சிசி, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் எகிப்து அதிபருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி - அதிபர் எல் சிசி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே சைபர் பாதுகாப்பு, கலாசாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 5 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 12 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.