திருட்டு போன தனது செல்போனை 24 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து சின்னத்திரை நடிகர் அழகப்பன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பெரம்பூரில் உள்ள துணிக்கடைக்கு ஷூட்டிங்கிற்காக சென்ற நடிகர் அழகப்பன், அங்கு டேபிளில் வைத்த தனது 60ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போனதாக போலீசில் புகாரளித்தார்.
வாடிக்கையாளர் போல கடைக்கு சென்ற 2 பெண்களில் ஒருவர் செல்போனை திருடியது சிசிடிவி மூலம் தெரியவந்ததை அடுத்து அந்த பெண்களை போலீசார் தேடி வந்த நிலையில், அடையாளத்துடன் ஊடகங்களில் செய்திகளும் வெளியானதால் அச்சமடைந்த பெண்கள், காவல்நிலையத்தில் செல்போனை ஒப்படைத்துவிட்டு மன்னிப்பு கோரியுள்ளனர்.
பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமென அழகப்பன் கேட்டுக்கொண்டதை அடுத்து, 2 பெண்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.