ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, கட்சியின் முடிவை அறிவித்த கமலஹாசன், தேர்தல் பொறுப்பாளரையும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டார்.