ரஷ்யாவிடம் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் குறைவாக இருப்பதாக மேற்கத்திய நாடுகளின் அறிக்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இதனை அவர் குறிப்பிட்டார்.
ஆயுத தயாரிப்புத் தொழிற்சாலை அமைந்துள்ள காலனிஷ்கோவ்-க்குச் சென்ற மெட்வதேவ், அங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள், பீரங்கி குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஆய்வு செய்தார்.