போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத பணப்பரிமாற்றம், தீவிரவாதத்திற்கு நிதித் திரட்டுதல் போன்ற குற்றச் செயல்களுக்கு 5 ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படக் கூடும் என்று டெல்லியில் நடைபெற்ற டிஜிபிக்கள் மாநாட்டில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இணையவழிக் குற்றங்கள் மற்றும் சைபர் தாக்குதல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் ஒரு முழு சிஸ்டத்தையே முடக்கக் கூடிய ஆபத்து இருப்பதையும் சில மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் எழுதிய அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
டிரோன்களைக் கட்டுப்படுத்துதல், ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்தல் போன்ற நன்மைகள் 5ஜி தொழில் நுட்பத்தால் கிடைக்கும் என்ற போதும் பாதகமான அம்சங்களும் இருப்பது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.