உடல் எடை அதிகரிப்பு, புற்றுநோய் குறித்து சமூக வலைதளங்களில் வைரல் கருத்துகளை தெரிவித்த சித்த மருத்துவர் ஷர்மிகா இந்திய மருத்துவ இயக்குநரகத்தின் விசாரணைக்கு ஆஜரானார்.
ஷர்மிகாவின் கருத்துக்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் அவருக்கு மருத்துவ இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற 40 நிமிட விசாரணையில் பங்கேற்று பதில் அளித்தார்.
விசாரணையின் போது, விசாரணைக்கு நேரமாகுது என்று கூலாக பதிலளித்த ஷர்மிகா, விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளை புறக்கணித்துச் சென்றார்.
இதற்கிடையே, ஷர்மிகாவிற்கு ஆதரவாக, விசாரணை நடைபெற்ற இடத்தில் சித்த மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தமிழ்செல்வன் தெரிவித்த கருத்துக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் மூலம் சித்த மருத்துவர்கள் அனைவருக்குமே அனுமதி இல்லை என்ற அடிப்படையில் அவரது பேச்சு இருந்ததால், கோபமடைந்த கவுன்சில் பணியாளர்கள் காவல்துறைக்கு புகார் அளித்தனர். இதனையறிந்த அவர், உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.