கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்து வருவதோடு, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் ஊழியர்கள் அமெரிக்காவின் க்ரீன் கார்டு பெறுவதற்கான செயல்முறையை முடக்கி வருவது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவிற்கு பணிக்குச் செல்வோர் அந்நாட்டின் பிரேம் எனப்படும் தொழிலாளர் துறையின் சான்றிதழைப் பெற வேண்டும். இந்நிலையில், பிரேம் தொடர்பாக ஊழியர்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும், இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம் என்று ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பி உள்ளது.
அதே நேரத்தில் ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்ட பிரேம் சான்றிதழ் மற்றும் விசா கோருவோருக்கு எந்த தடையும் இல்லையென கூகுள் கூறியுள்ளது.