ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலத்தில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மங்கல லட்சுமி சமேத அழகுராஜப் பெருமாள் கோயிலின் புனரமைப்புப் பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு , இரண்டரை ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உபயதாரர்களின் பங்களிப்புடன் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, இரண்டு ஆண்டுகளில் இதுவரை 3,443 கோடி அளவிலான இந்து சமய அறநிலைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு லட்சம் ஏக்கர் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு, ஆயிரம் ஏக்கர் பரப்பிலான கோயில் நிலங்களுக்கு வேலிகள் அமைக்கும் பணிகள் துவங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.