கேரள மாநிலம் பாலக்காடு வனப்பகுதியில் நான்கு ஆண்டுகளாக கிராம மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
வயல்களை சேதப்படுத்தி வீடுகளை தாக்கி ஊர்மக்களையும் அந்த யானை தாக்கி வந்தது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில், வயநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட 3 கும்கி யானைகளுடன் வனத்துறை அதிகாரிகளின் சிறப்புக் குழு அப்பகுதிக்கு வந்தது.
பல முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், நேற்று ஒருவழியாக யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
பிடி 7 என அழைக்கப்பட்ட அந்த யானைக்கு தற்போது தோனி என்று பெயரிட்ட வனத்துறையினர், கும்கி யானையாக அதனை மாற்ற பயிற்சி அளிக்கப்போவதாகத் தெரிவித்தனர்.