நேட்டோ அமைப்பு போல அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் இணைந்து புதிய ராணுவ கூட்டமைப்பை உருவாக்க கூடும் என்று ரஷ்ய அமைச்சர் மெட்வடேவ் எச்சரித்துள்ளார்.
உக்ரைன், ரஸ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள் உதவி வருகின்றன. இதற்கு அமெரிக்காவும் ஆதரவளித்து வருகிறது.
இதை சுட்டிக்காட்டிய முன்னாள் அதிபரும், தற்போது அமைச்சராக இருப்பவருமான டிமிட்ரி மெட்வடேவ். அமெரிக்காவால் துன்புறுத்தப்பட்ட நாடுகள் நேட்டோ போல ராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறினார்.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு பின்னடைவு ஏற்பட்டால், அணு ஆயதத்தை பயன்படுத்த தங்கள் நாடு தயங்காது என்றும் மெட்வடேவ் தெரிவித்தார்.