யார் ஷாரூக்கான்.? என அசாம் முதலமைச்சர் சனிக்கிழமை கேட்டிருந்த நிலையில், தன்னை நள்ளிரவு 2 மணிக்கு ஷாருக்கான் தொலைபேசியில் தொடர்புக் கொண்டதாக முதலமைச்சர் இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வரும் 25ம் தேதி வெளியாக உள்ள ஷாருக்கானின் பதான் படத்தின் சுவரொட்டிகள் கவுகாத்தியில் கிழித்தெறியப்பட்ட நிலையில், அசாமிய படங்களை பற்றி மட்டுமே தான் கவலைப்படுவதாகவும், ஷாருக்கான் தன்னை தொடர்புக் கொண்டால் பதான் பட பிரச்சனையில் தான் தலையிடுவதாக முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா செய்தியாளர்களிடம் நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஷாருக்கான் தன்னை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, கவுகாத்தியில் பதான் போஸ்டர் கிழிப்பு குறித்து கவலை தெரிவித்தார்.
அப்போது, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை என்று அவருக்கு நான் உறுதியளித்ததோடு, இதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக தான் தெரிவித்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.